சர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவும் ஒக்ரோபர் 3 ம் திகதி ஐ.நா சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
'போதைக்கு கண்டிப்பாக முற்றுப்புள்ளி' என்ற தொனிப்பொருளில் மது ஒழிப்பு தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது.
மேலும் மதுபோதைக்கு எதிராக சமூகத்தை ஒன்று திரட்டும் நோக்கில் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்களைத் தெளிவுபடுத்துவதற்கான திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் சந்துன் கனேகொட தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.