சர்வதேச ஜனநாயக தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இத் தினம் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
ஜனநாயக கோட்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் அதனை நிலைநிறுத்துவதையும் நோக்காகக் கொண்டு ஐ.நா இந்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
மக்களிடையே ஜனநாயகம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கும் பொருத்தமான முறையில் இந்த தினத்தை அனுஷ்டிக்குமாறும் உறுப்பு நாடுகள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு ஐ.நா அழைப்பு விடுப்பதும் இந்த தினத்தின் நோக்கமாகும்.
இந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் 192 உறுப்பு நாடுகள் அங்கீகரித்துள்ளன.
ஜனநாயகத்தில் இளையோரை ஈடுபடுத்துதல் என்பதே இம்முறை சர்வதேச ஜனநாயக தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்குவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் எதிர்கொள்ளப்பட்ட சவால்களுக்கு தீர்வை பெறுவதற்கு தம்மால் என்ன செய்ய முடியும் என்பதை இளையோர் சிந்திக்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
விதியை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறு உங்கள் கனவுகளை அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்ளுமாறும் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.